FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
படிப்புகள்

பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

பொறியியல் கல்வியின் வரிசையில் புதுமையை புகுத்தும் கணினி அறிவியல் பற்றி..

Updated On : 12 பிப்ரவரி 2026, 11:00 am IST
கணினி அறிவியல் - ENS
பகிர்:

டிஜிட்டல் மயமாகி வரும் 21-ஆம் நூற்றாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கணினி அறிவியல் பொறியாளர்களின் தேவை மிக அதிகமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது. கணினி அறிவியல், பொறியியலின் ஒரு பிரிவாக மட்டுமல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய உலகைக் கட்டமைக்கும் அடித்தளமாக உள்ளது. இந்தத் துறையின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும், நாளைய நவீன உலகை கட்டமைப்புக்கும் அடிப்படைகளாக உள்ளன.

கணினி அறிவியல் துறை தொடர்பாக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பேராசிரியர் முனைவர் எஸ். முத்துராமலிங்கம் தெரிவித்ததாவது :

கணினி அறிவியல் பாடத்திட்டம், புதுமையை புகுத்தும் திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குகிறது. தொழில் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் நவீனப்படுத்தும் சக்திக் கொண்டவர்களாக மாணவர்களை வார்த்தெடுக்கிறது. நிரலாக்க மொழிகள், தரவுத்தள வடிவமைப்பு, இயக்க முறைமைகள், தரவுத்தள மேலாண்மை அமைப்புகள், கணினி நெட்வொர்க், மென்பொருள் பொறியியல் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது கணினி அறிவியல் பொறியியல்.

Advertisement

Advertisement

இதனுடன், தனித்துவம் வாய்ந்த குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோ இன்பர்மேட்டிக்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அந்தத் துறைகளிலும் ஆழங்கால்பட்ட திறன் கொண்டவர்களாக உருவாகும் வாய்ப்பை அளிக்கிறது கணினி அறிவியல் பொறியியல் பாடத்திட்டம்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கம், கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் தங்கச் சுரங்கமாக உள்ளன. சாப்ட்வேர் டெவலப்பர், வெப் டெவலப்பர், மெஷின் லேர்னிங் பொறியாளர், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா அனலைஸ்ட், சைபர் செக்யூரிட்டி அனலைஸ்ட், க்ளவுட் சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட், கணினி பொறியாளர், ப்ளாக் செயின் டெவலப்பர், யுஐ / யுஎக்ஸ் டிசைனர், கேம் டெவலப்பர், ஏ.ஐ ஆராய்ச்சியாளர் போன்ற பல பணி வாய்ப்புகளை கணினி அறிவியல் பொறியியல் துறை வழங்குகிறது.

இவை தவிர, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு நிதி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும் கணினி அறிவியல் பொறியாளர்களின் படைப்புகள் அவசியமாகின்றன. இதன் மூலம், பரந்துபட்ட பணி வாய்ப்புகளைக் கொண்டதாக உள்ளது கணினி அறிவியல் பொறியியல் துறை.

உலகை நவீனமயமாக்கி, மறுவடிமைப்பு செய்வதில் தலைமை வகிக்கும் துறையாக உள்ளது கணினி அறிவியல். இந்தத் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவியல் (ஏ.ஐ) சாதாரண அரட்டை முதல் தானியங்கி கார்களை உருவாக்குவது வரை பல புரட்சிகளை ஏற்படுத்துகிறது. நிறுவனங்களின் தரவுகளைக் கொண்டு அந்த நிறுவனத்தை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் தேவையான உத்திகளை அளிப்பதாக உள்ளது பிக் டேட்டா அனலைடிக்ஸ். நவீன உலகில் வளர்ந்து வரும் இணையவழிக் குற்றங்களை (சைபர் கிரைம்) கண்காணித்து தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது சைபர் செக்யூரிட்டி.

வாக்குப் பதிவு முறை, விநியோக மேலாண்மை, எண்ம முறையிலான அடையாளம் அறிதல் பணிகளில் பிளாக் செயின் பியான்ட் கிரிப்ட்டோகரன்சி பிரிவு முக்கியப் பங்காற்றுகிறது. ஆற்றலை ஒருங்கிணத்து பயன்படுத்தும் தொழில்நுட்பமாக உள்ளது குவான்டம் கம்ப்யூட்டிங்.

இந்தப் பிரிவுகள், தொழில்நுட்ப அறிவுடன் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் புதியனவற்றை உருவாக்கும் சிந்தனையையும், திறனையும் மாணவர்களுக்கு அளிப்பது சிறப்புக்குரியது.

நவீன உலகில் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கான பணி வாய்ப்புகளை உருவாக்குகிறது கணினி அறிவியல் - செயற்கை நுண்ணறிவு பிரிவு. கணினி அறிவியல் துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவு மாணவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகளை அளிப்பவையாக உள்ளன. மேலும், உயிரியல், சுகாதாரம், சுற்றுச்சூழல் அறிவியல், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளுடனும் இந்த மாணவர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

கிளவுட் கம்ப்யூட்டிங், ஓபன்சோர்ஸ் பிளாஸ்ட் பாஃர்ம் சார்ந்த தொழில் நுட்ப அறிவு, கணினி அறிவியல் மாணவர்களுக்குக் கிடைப்பதால் புதிய தொழில்களை உருவாக்கவும், தொழில்களை புத்தாக்கம் செய்வதிலும் இந்த மாணவர்களின் பங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகியுள்ளது.

மற்ற பொறியியல் துறைகள் எதிலும் இல்லாத அளவுக்கு பல்வேறு வகையான ஆற்றல் மிக்க வேலைவாய்ப்புகளை வழங்குகிறது கணினி அறிவியல். மெஷின் லேர்னிங், பிளாக் செயின் உள்பட பல்வேறு துறைகளுக்கு கணினி அறிவியலே அடிப்படை ஆதாரமாக உள்ளது. புதிய உலகை கட்டமைக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவதால், கணினி அறிவியல் பொறியியல் துறை, ஓர் பொறியியல் துறையாக மட்டுமல்லாமல் வருங்காலத்தை கட்டமைக்கும் துறையாக உள்ளது என்றார் அவர்.

summary

About computer science, which is innovating in the field of engineering education.

இதையும் படிக்க...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments