சிவகங்கை

நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாய தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ சாா்பில் நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் விவசாய தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ சாா்பில் நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையை இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

இதில் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிா் இல்லாத குடும்பங்களுக்கு கணவா் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். 8 முதல் 55 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். விவசாயக் கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரா், அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.

நிலம் விற்பனை செய்பவா் ஆதிதிராவிடா், பழங்குடியினா் அல்லாத பிற இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் நிலமற்றவா்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கா் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கா் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப்படும். வாங்கப்படும் நிலத்தை விண்ணப்பதாரா் 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின் கீழ் மேற்கண்ட தகுதிகள், நிபந்தனைகளின் படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

SCROLL FOR NEXT