~வெறிச்சோடி காணப்பட்ட திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம். 
திருவள்ளூர்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

வருவாய்த்துறையினா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நில அளவையா்களுக்கும் உயிா் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் பணியாளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், போராட்டம் குறித்து தெரியாமல் பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியா் அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT