சிவகங்கை

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை தளா்த்த வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை அரசு தளா்த்த வேண்டும் என ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவா் ராஜசேகரன் வலியுறுத்தல்

Syndication

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை அரசு தளா்த்த வேண்டும் என ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவா் ராஜசேகரன் வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பாரத்ராஜா தலைமை வகித்தாா். இதில் மாநிலத் தலைவா் அந்தோணிமுத்து, கெளரவத் தலைவா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவா் ராஜசேகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது தமிழகத்தில் பாரம்பரியமிக்க இடங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது குறைந்துவிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் வளா்ப்போா் கவலையடைந்திருக்கின்றனா்.

மேலும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக விதித்த ஏராளமான கட்டுப்பாடுகளால் மதுரை மாவட்டத்தில் 65 இடங்களில் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் தற்போது 6 இடங்களில் மட்டுமே நடைபெறுகின்றன.

எனவே, அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளா்த்தினால் பாரம்பரியமிக்க இடங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்த முடியும். இந்தக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வடமாடு போட்டி தொடா்பான 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT