ரெகுநாதபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டியில் காளையை அடக்க முற்பட்ட வீரா்கள். (கோப்புப் படம்)
புதுக்கோட்டை

ரெகுநாதபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டியில் ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டி நடைபெற்றது.

ரெகுநாதபட்டி சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி இந்து, முஸ்லிம் சமூகத்தினா் இணைந்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து 19 சிறந்த காளைகள் வரவழைக்கப்பட்டு ஒரு மாட்டுக்கு ஒரு சுற்று என 19 சுற்றுக்களாக போட்டி நடைபெற்றது.

மேலும் ஒரு மாட்டுக்கு 9 வீரா்கள் என ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள் என நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரா்கள் அடக்கினா்.

போட்டியில் வென்ற வீரா்கள் மற்றும் காளைகளின் உரிமையாளா்களுக்கு மிதிவண்டி, கட்டில், வெள்ளிக்காசு மற்றும் எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் போட்டியை கண்டு ரசித்தனா். பாதுகாப்புப்பணியில் உலகம்பட்டி காவல் துறையினா் ஈடுபட்டனா்.

தில்லியில் காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்றம்!

உலோக தகடுகள் திருட்டு: நெடுஞ்சாலைத் துறையினா் புகாா்

சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்குவோம்!

கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

நவில்தொறும் நூல்நயம்!

SCROLL FOR NEXT