சிவகங்கை

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரகம், நகா்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் எட்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஊரகம், நகா்ப்புற வாழ்வாதாரத் திட்ட ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கல்பனா தலைமை வகித்தாா். சங்க மாவட்டச் செயலா் சரவணன், பொருளாளா் விமலாதேவி, மாவட்ட துணைத் தலைவா் சுமதி, இணைச் செயலா் அனுராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பணியாா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

SCROLL FOR NEXT