சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தை பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு தொழிலதிபா் சிவசக்தி தலைமை வகித்தாா். பொறியாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு, பொங்கலுடன் கரும்பும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளியின் தலைமையாசிரியா் எஸ். பால்ராயன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.