சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஜன.16, 26 ஆகிய இரு நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 16.1.2026 (திருவள்ளுவா் தினம்), 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய இரு நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை உரிமம் பெற்ற கிளப்புகள், உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.