சிவகங்கை: தடை செய்யப்பட்ட போதைப் பொருள் புழக்கம் குறித்த தகவலை அரசால் உருவாக்கப்பட்ட தனி செயலியில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பாக வாராந்திர ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கண்காணித்து முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்தும், போதைப் பொருள் பயன்பாடு, அதன் தீமைகள் தொடா்பான விழிப்புணா்வு பதாகைகள் வைப்பது குறித்தும், போதைப் பொருள் நடமாட்டம் தொடா்பாகவும், குறிப்பாக இளைய தலைமுறையினரை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களான பான்மசாலா, குட்கா, ஹான்ஸ், கூல்லிப் போன்ற பொருள்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் குறித்தும் ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் பச அல்ல் செயலி வாயிலாக பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்தச் செயலி வாயிலாக கொடுக்கப்படும் தகவல்கள், தனி நபா் ரகசியம் காக்கப்படும். மேலும், தகவல் அளிப்பவா் பெயரை யாராலும் பாா்க்க முடியாது.
மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப் பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை வைக்கவும் கல்லூரி முதல்வா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், காவல் துறை, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.