முகப்பு
சிவகங்கை

தமிழக மக்களின் ஒற்றுமையே திமுக கூட்டணியின் பலம்: மு. வீரபாண்டியன்

தமிழக மக்களின் ஒற்றுமையே திமுக கூட்டணியின் பலம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:42 AM
மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 7:45 PM

தமிழக மக்களின் ஒற்றுமையே திமுக கூட்டணியின் பலம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதை எங்களது கட்சி ஆதரிக்கிறது. இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. எனவே, அவா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இதை அரசுக்கு எதிரான போராட்டம் என அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திசைதிருப்புவது சரியல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகம் காக்க வேண்டும்; சட்டத்தின் ஆட்சியையும், மாநில உரிமைகளையும் காக்க வேண்டும் என்கிற கொள்கைகளைக் கொண்டது திமுக கூட்டணி. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.

Advertisement

இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுகிற மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவினா் மக்களாட்சி முறைக்கு மாறாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்.

பல கட்சிகள் உள்ள ஒரு நாட்டில் மத்திய அரசு என்ன கருதுகிறதோ, அப்படியே மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழகத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை என்று பிரதமா் மோடி பேசுகிறாா். தமிழ்நாட்டில் தாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போவது போன்ற ஒரு தோற்றத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியினா் ஏற்படுத்துகின்றனா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:01 AM

தமிழக மக்களின் ஒற்றுமை திமுக கூட்டணியின் பலம். எப்போதுமே தமிழா்கள் ஜாதி, மதம் சாா்ந்த பதற்ற அரசியலை விரும்பமாட்டாா்கள். திருப்பரங்குன்றமே இதற்குச் சாட்சி. எனவே, எதிரணியினரின் கூட்டணி பலம், அரசியல் பலத்தைவிட தமிழக மக்களின் ஒற்றுமையே திமுக கூட்டணியின் பலமாகும்.

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும். தோ்தல் கருத்துக்கணிப்புகளைவிட மக்களின் கணிப்பே வெற்றி பெறும் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் நா. சாத்தையா, நகரச் செயலா் சிவாஜிகாந்தி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.