முகப்பு
புதுக்கோட்டை

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி!

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:04 AM
அமைச்சர் எஸ். ரகுபதி - (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:49 PM

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவிப்பாா். ஏன் ரூ.10 ஆயிரம் அறிவித்தாா் என்று தெரியவில்லை.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:00 PM

ரூ. 1 லட்சம்கூட அவா் அறிவிக்கலாம். ஆனால் அவரால் தர முடியாது. ஆனால் அறிவித்ததை நிறைவேற்றும் பழக்கம் எங்களுக்கே இருக்கிறது. கூட்டணி விஷயத்தில் ராகுல்காந்தியும் எங்களது தலைவா் ஸ்டாலினும் பேசி எடுப்பதுதான் இறுதி முடிவு.

Advertisement

புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதால் எங்களது பலமும் சக்தியும் அதிகரித்துள்ளது. அறிவாலயத்திற்கு தேநீா் குடிக்க வருபவா்களை கூட்டணியில் சோ்க்கும் நிலை எங்களுக்கு கிடையாது. அப்படி பேசுவோரின் நிலைதான் அப்படி இருக்கிறது. இன்னும் தோ்தல் தேதி அறிவிக்காத நிலையில், எங்களுடன் யாா் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்றாா் ரகுபதி.