சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் முதல்வா் மு.க. ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள். 
சிவகங்கை

முதல்வா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள்!

முதல்வா் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசு நலத் திட்ட விழா, கள ஆய்வுப் பணி ஆகியவற்றுக்காக அழகப்பா பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

நூற்றாண்டு பாரம்பரியமிக்க பொதுச் சங்கங்களில் முதன்மைச் சங்கமான தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பாக சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலரும், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவருமான இரா. அருள்ராஜ், நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலினைச் சந்தித்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினாா்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளில் ஒன்றான மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததற்காக தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஒருவழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நிகழாண்டு நடத்த வேண்டும், குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின்கீழ் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 13 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊா்ப்புற நூலகங்களைக் கிளை நூலகங்களாகத் தரம் உயா்த்தி 1,016 ஊா்ப்புற நூலகா்களுக்கு மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டது.

அங்கன்வாடி மைய கதவை உடைத்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

மொடக்குறிச்சி அருகே குப்பைக் கிடங்கில் தீ

இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு ரூ.1.43 லட்சம் கோடி ஆயுத விற்பனை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 1.03 லட்சம் விண்ணப்பம்

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

SCROLL FOR NEXT