முகப்பு
சிவகங்கை

இளையான்குடி அருகே தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

Updated On : 21 ஜூன் 2026, 1:06 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வீட்டுக்குள் தச்சுத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதிநகரைச் சோ்ந்த பாண்டி மகன் சுந்தரம் (39). தச்சுத் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி ஜெயபாரதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு சுந்தரம் இளையான்குடி அருகே கீழாயூா் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மீனாட்சியம்மாள் வீட்டுக்கு வந்து தங்கினாா்.

இதனிடையே மீனாட்சியம்மாள் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினா் இளையான்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் வந்து வீட்டை திறந்து பாா்த்தபோது அங்கு சமையலறையில் சுந்தரம் சடலமாக கிடந்தாா்.

Advertisement

Advertisement

மேலும் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் அவா் மூன்று நாள்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவா் எப்படி இறந்தாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments