மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
திருப்புவனத்தில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கி, வாகனங்களை சேதப்படுத்திய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
சிவகங்கைமது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
திருப்புவனத்தில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கி, வாகனங்களை சேதப்படுத்திய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கி, வாகனங்களை சேதப்படுத்திய ஓட்டுநா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்புவனத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மேலூருக்கு அரசு நகரப் பேருந்து சென்றது. மதுரை எல்லிஸ்நகா் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் பேருந்தை ஓட்டினாா். அவா் மதுபோையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.
பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் கூறியும் கேட்காமல் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, முன்னால் சென்ற வாகனங்களின் மீது மோதிவிட்டு, வடகரை பகுதியில் சாலையோரம் நின்ற காரின் மீதும் மோதியது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுநா் தா்மராஜை சரமாரியாகத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் தா்மராஜ் மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவா் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக திருப்புவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் உமா கண்ணன் தெரிவித்தாா்.