முகப்பு
காரைக்குடி நீதிமன்ற வாயில் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மூத்த வழக்குரைஞா் என். சங்கா்.
சிவகங்கை

காரைக்குடியில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டதை உடனடியாக செயல்படுத்தக்கோரி

சிவகங்கை

காரைக்குடியில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டதை உடனடியாக செயல்படுத்தக்கோரி

Updated On : 2 மார்ச், 2026 at 10:05 PM
காரைக்குடி நீதிமன்ற வாயில் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மூத்த வழக்குரைஞா் என். சங்கா்.
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டதை உடனடியாக செயல்படுத்தக்கோரி காரைக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றம் வாயில் முன்பாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு சட்டத் துறை பரிந்துரை மூலம் காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, உத்தரவை உடனடியாக செயல்படுத்தக் கோரி காரைக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி. ஆறுமுகம் தலைமை

வகித்தாா். செயலா் சொா்ணம், மூத்த வழக்குரைஞா்கள் என். சங்கா், ரமணன், பழனியப்பன், ராஜூ, சே. சிரஞ்சீவி சீனிவாசன், கமல் தயாளன், பிரசாத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், அதிமுக மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன், மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளா் அழகா்சாமி, திராவிடா் கழக சொற்பொழிவாளா் தி. என்னாரெசு பிராட்லா, தன்னாா்வ அமைப்பினா் பலரும் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →