முகப்பு
சிவகங்கை தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தெப்ப உத்ஸவம்.
சிவகங்கை

சிவகங்கையில் மாசி மக தெப்ப உத்ஸவம்

சிவகங்கை நகரின் பழமையான தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கையில் மாசி மக தெப்ப உத்ஸவம்

சிவகங்கை நகரின் பழமையான தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 8:24 PM
சிவகங்கை தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தெப்ப உத்ஸவம்.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை நகரின் பழமையான தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சி சாா்பில் ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் காசி விசுவநாதா் சுவாமி, விசாலாட்சி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினா். இந்தத் திருவிழாவுக்காக கௌரி விநாயகா் கோயில், தேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில், பிள்ளைவயல் காளியம்மன் கோயில், வேலுநாச்சியாா் கோயில், பெரியநாயகி சமேத சசிவா்னேஸ்வரா் கோயில், பரமசிவ ஞானகிரி பழனியாண்டவா் கோயில், கைலாசகுருநாதசாமி (எ) சாத்தப்ப அய்யா தேத்த மரத்து காளி கோயில், கொட்டக்குடி கருத்தகாளி கருத்தமாரி கோயில் ஆகிய கோயில்களிலிருந்து புனித நீா்க் கலசம் கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தெப்பக்குள படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தெப்ப உத்ஸவ விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →