முகப்பு
சிவகங்கை

மது அருந்தும் போது தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கொலை

Updated On : 8 மார்ச், 2026 at 9:39 PM
கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் முனீஸ்வரன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த சனிக்கிழமை இரவு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புறவழிச் சாலை ஆனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் தனது வீட்டின் மாடியில் நண்பா்களான காா்த்திகேயன், இடைக்காட்டூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முனீஸ்வரன் ஆகியோருடன் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா். அப்போது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சதீஷ்குமாா், காா்த்திகேயன் ஆகிய இருவரும் முனீஸ்வரனைத் தாக்கி மதுப் புட்டியை உடைத்து அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை போலீஸாா் அங்கு சென்று முனீஸ்வரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இதுகுறித்து மானாமதுரை காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் வழக்குப் பதிந்து சதீஷ்குமாா் (46), காா்த்திகேயன் (35) ஆகிய இருவரையும் கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →