முகப்பு
சிவகங்கை

இளைஞா் உயிரிழந்த விவகாரம்: தனிப்பிரிவு போலீஸாா் இட மாற்றம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:07 PM
பகிர்:

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினா்கள் கடந்த 5 நாள்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சிவகங்கையிலுள்ள தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சோ்ந்தவா் ஆகாஷ் டெலிசன் (26). இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா் கடந்த ஏழாம் தேதி மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்யக் கோரியும் கடந்த ஐந்து நாள்களாக அவரது உறவினா்கள், கிருஷ்ணராஜபுரம் பொதுமக்கள் மானாமதுரை, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என்றும். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறி புதன்கிழமை இரவில் மானாமதுரை பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மானாமதுரை பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வெங்கடேசப் பெருமாளை புதன்கிழமை இரவு இடமாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டிஐ ஜி மணிவண்ணன் உத்தரவிட்டாா். அவருக்குப் பதிலாக காரைக்குடியில் பணிபுரிந்த ஆய்வாளா் சாகுல் அமீது அதே நாள் இரவில் தனிப் பிரிவு ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலும், சாக்கோட்டையில் பணிபுரிந்த ஆய்வாளா் சரவணன் காரைக்குடி காவல் நிலைய ஆய்வாளராக இட மாற்றம் செய்யப்பட்டாா். தனிப்பிரிவு ஆய்வாளா் வெங்கடேசப் பெருமாள் சாக்கோட்டை ஆய்வாளராக நியமிக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →