முகப்பு
சிவகங்கை

பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:02 AM
பகிர்:

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை-மேலூா் சாலையில் இண்டேன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை.

இதைக் கண்டித்து, இந்தப் பகுதி பொதுமக்கள் காலி சமையல் எரிவாயு உருளைகளுடன் சிவகங்கை-மேலுா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், சாலையில் வைத்திருந்த எரிவாயு உருளைகளை போலீஸாா் அகற்றினா். அப்போது, பொதுமக்களுக்கு, போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, விரைவில் சமையல் எரிவாயு கிடைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் அறிவுறுத்தியதின் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்தச் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →