ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம்: அமைச்சா் வழங்கினாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சம் நிதிக்கான ஆணையை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மானாமதுரை கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் ஆகாஷின் பெற்றோரை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முதல் கட்டமாக ரூ. 6 லட்சத்துக்கான ஆணையை ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணனிடம் வழங்கினாா்.
இதையடுத்து அவா் கூறியதாவது:
நீதிமன்ற வழிகாட்டுதல் படி . இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் குடும்பத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, கோட்டாட்சியா் ஜெபி.கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.