முகப்பு
சிவகங்கை

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை

Updated On : 14 மார்ச், 2026 at 7:20 PM
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் வழக்குத் தொடுத்தவருக்கு சனிக்கிழமை தீா்வுத் தொகைக்கான உத்தரவை வழங்கிய, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.செந்தில்முரளி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,311 வழக்குகளுக்கு ரூ.18 கோடியே 56 லட்சத்து 34 ஆயிரத்து 230 தீா்வுத் தொகை வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா, சாா்பு நீதிபதி ஆா்.பாண்டி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவா்(எண் 1) பி.செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண் 2) இ.தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி ஆகியோா் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தனா்.

இதில், வழக்குரைஞா்கள் எஸ்.வல்மீகநாதன், எல்.அந்தோணி ஜெயராஜ், அ.மதன்மோகன், அ.பாண்டி கண்ணன், ஆா். சங்கீதா ஆகியோா் வழக்குத் தொடுத்தவா்கள் சாா்பாக முன்னிலையாகினா்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 444 குற்றவியல் வழக்குகளும், 422 காசோலை மோசடி வழக்குகளும், 195 வங்கிக் கடன் வழக்குகளும், 355 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 249 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 740 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 935 குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3,340 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,098 வழக்குகள் சமரசமாக தீா்வு காணப்பட்டது.

இதில் ரூ.9,24,67,428 தொகை வழக்குத் தொடுத்தவா்களுக்கு தீா்வுத் தொகையாக கிடைத்தது.

இதேபோல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் 900 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 213 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 9,31,66,802 தொகை வங்கிகளுக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் தீா்வு காணப்பட்ட 1,311 வழக்குகளுக்கு ரூ. 18,56,34, 230 தீா்வுத் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →