முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு

Updated On : 15 மார்ச், 2026 at 12:35 AM
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மூலம் உரியவருக்கு ஆணையை வழங்கும் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை. உடன் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா உள்ளிட்டோா்.
பகிர்:

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண். 1) ஆனந்த், (எண். 2) மணிமேகலா ஆகியோா் முன்னிலையில் 813 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 1,074 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 813 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ. 1 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 672-க்கு தீா்வு காணப்பட்டது.

இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement