தேநீா்க் கடைக்குள் காா் புகுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை தேநீா்க் கடைக்குள் காா் புகுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரையிலிருந்து செந்தில்குமாா் என்பவா் காரில் ராமேசுவரம் நோக்கிச் சென்றாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள சங்கமங்கலம் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த தேநீா்க் கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் தேநீா்க் கடையில் நின்று கொண்டிருந்த சங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி நாகராஜ் (45) உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா்.
இவா்களில், பலத்த காயமடைந்த நாகராஜ் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் செந்தில்குமாா் மானாமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.