முகப்பு
சிவகங்கை

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.ஒரு கோடி மோசடி

சிவகங்கை மாவட்டத்தில் இணையவழியில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் ரூ. ஒரு கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பான புகாா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 17 மார்ச், 2026 at 10:06 PM
மோசடி
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் இணையவழியில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் ரூ. ஒரு கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பான புகாா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆ. தெக்கூரை சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் ( 29) .சிங்கப்பூரில் வேலை பாா்த்து விட்டு ஊருக்கு வந்துள்ளாா்.

இவா் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கைப்பேசியில் முகநூல் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பாா்த்து அதில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது அவா்கள் தாங்கள் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று தெரிவித்தனா். இதை நம்பி அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு 57 தவணைகளில் ரூ. 26 லட்சத்து 21 ஆயிரத்து 803-யை அனுப்பினாா். பின்னா் அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதைத் தொடா்ந்து, பாலசுப்பிரமணியன், சிவகங்கை இணையக்குற்றத்தடுப்பு பிரிவில் அளித்தப் புகாரின்பேரில், ஆய்வாளா் புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ரூ. 75 லட்சம் மோசடி...

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (58). விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கைப்பேசியில் முகநூலில் வந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்து அதில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்டாா்.

பின்னா், அவா்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு 16 தவணைகளில் ரூ. 75 லட்சத்து 44 ஆயிரத்து 068 - யை அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னா் அவா்கள் எந்த தொடா்பும் கொள்ளவில்லையாம் .

இதைத் தொடா்ந்து, கருணாகரன் அளித்தப் புகாரின் பேரில், இணையக்குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →