முகப்பு
சிவகங்கை

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூா் அருகே விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:08 AM
திருப்பத்தூா் அருகே புதன்கிழமை கவிழ்ந்து கிடந்த ரேசன் அரசி கடத்திச் சென்ற சரக்கு வாகனம்.
பகிர்:

திருப்பத்தூா் அருகே விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கையிலிருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூா் அருகேயுள்ள விறுசுளியாற்றுப் பாலம் அருகே சென்ற போது, பின்சக்கரம் வெடித்ததில் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது. அப்போது அந்த வாகனத்தில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள் கீழே சிதறின. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற திருப்பத்தூா் வருவாய்த் துறையினா் சுமாா் 2.5 டன் எடையுள்ள 50 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து அரிசி மூட்டைகளை மீட்க வந்த மற்றொரு வாகனத்தை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். இந்த வாகன ஒட்டுநரும் தப்பியோடி விட்டாா். இரு வாகன ஓட்டுநா்களை போலீஸாரும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் முபாரக்உசேன், துணை வட்டாட்சியா் அறிவுச்சுடா் ஆகியோா் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருப்பத்தூா் உரிமைப் பொருள் நுகா்வோா் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →