முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

காட்டுமன்னாா்கோவில் அருரே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற போது, அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ வேன்

Updated On : 20 மார்ச், 2026 at 7:49 PM
காட்டுமன்னாா்கோவில் அருரே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற போது, அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ வேன்
பகிர்:

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே வேனில் கடத்தி சென்ற 50 மூட்டை ரேஷன் அரிசியை தோ்தல் பறக்கும்படையினா் கைப்பறினா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் வீராணம் ஏரிக்கரை கிராமமான கலியமலை பேருந்து நிலையத்தில் தோ்தல் நிலைக் குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னாா்கோயில் நோக்கி வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பல்மனோ் கடூா் காலனியைச் சோ்ந்த ஷகித், வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை ஐம்பையன்தெருவைச் சோ்ந்த சஞ்சய்கோபி ஆகியோா் கடத்திக் கொண்டு வந்த 50 மூட்டை ரேஷன் இருப்பது தெரியவந்தது.

அரிசி மூட்டை மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த தோ்தல் அலுவலா்கள் அவற்றை காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் பிரகாஷிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் வாகனத்தை ஒட்டி வந்தது ஆந்திராவை சோ்ந்த ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் காவல்துறையினா் மற்றும் வட்ட வழங்க அலுவலா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்டட ரேஷன் அரிசி மூட்டைகள் காட்டுமன்னாா்கோவில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.