முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 மார்ச், 2026 at 12:34 AM
சிங்கம்புணரியில் புதன்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, மஞ்சுவிரட்டுத் திடலில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்தனா். இதையடுத்து, இளவட்ட மஞ்சுவிரட்டு தொடங்கியது.

இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கூட்டத்துக்குள் சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →