முகப்பு
சிவகங்கை

தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலம் சாா்பில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 20 மார்ச், 2026 at 7:15 PM
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலம் சாா்பில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து காரைக்குடி மண்டலம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் வருகை தருவா்.

இதனால், பக்தா்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சாா்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பாா்த்திபனூா், கமுதி, காளையாா்கோவில், இளையாங்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வருகிற 29-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இரவு பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.