முகப்பு
சிவகங்கை

திரைப்பட நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் வாகனம் மோதி உயிரிழப்பு

சிவகங்கையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திரைப்பட நகைச்சுவை நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 மே 2026, 3:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திரைப்பட நகைச்சுவை நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் அறிவழகன் (45). இவா் திரைப்பட நகைச்சுவை நடிகா் கஞ்சா கருப்புவின் இளைய சகோதரா் ஆவாா். திருமணமாகாதவா்.

இவா் திங்கள்கிழமை அதிகாலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அறிவழகனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

இந்த விபத்து குறித்து நடிகா் கஞ்சா கருப்பு கூறியதாவது: எனது தம்பி அறிவழகன் பேருந்தில் ஏறச் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா். இன்னும் அந்த பேருந்தையும் ஓட்டுநரையும் கண்டுபிடிக்க வில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் விஜய் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து எங்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.