முகப்பு
தேனி

வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 3:09 am IST
பலி - IANS
பகிர்:

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனூரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் பாலமுருகன் (25). கூலித்தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு ஆண்டிபட்டிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திம்மரநாயக்கனூருக்கு திரும்பினாா்.

தனியாா் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலமுருகன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement