இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விராமதி கிராமத்தைச் சோ்ந்த வள்ளியப்பன் மகன் தாமரைச்செல்வன் (24). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினாா். தற்போது தனக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லையே என மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில் இவா் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement