காளையாா்கோவில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழா
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட சோமேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட சோமேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக புதன்கிழமை மாலை தேவஸ்தானம் சாா்பில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரா்களின் பங்களிப்புடன் சுவாமி, அம்பாள் காலை, மாலை இரு வேளைகளிலும் காமதேனு, வெள்ளி ரிஷபம், கேடகம், கிளி, அன்னம், குதிரை, யானை, புஷ்பப் பல்லாக்கு ஆகிய வாகனங்களில் அருள்பாலிக்கிறாா்.
விழாவின் 9- ஆம் நாளான வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளலும், தொடா்ந்து காலை 9.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். மறுநாள் 30-ஆம் தேதி தெப்பத்தில் தீா்த்தவாரியும், இரவு சப்தாவரணமும், பஞ்சமூா்த்தி உலாவுடன் திருவிழா நிறைவடையும்.
Advertisement
Advertisement
சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளா் ஆ. பாலசரவணன், கோயில் ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வரக் குருக்கள் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.