தேனி

குறைதீர் கூட்டத்தில் 19 பேருக்கு நலத் திட்ட உதவி

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீர் கூட்டத்தில், 19 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.
சமூக நலத் துறை சார்பில் 11 பேருக்கு தலா ரூ.8,500 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், ஏழை விதவை தாய்மார்களின் பள்ளி செல்லும் குழந்தைகள் 5 பேருக்கு குறிப்பேடு மற்றும் வழிகாட்டி, ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 3 பெண்களுக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT