தேனி

தேனியில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

DIN

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 10.30 மணிக்கு  தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
 இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, தொழிற் பயிற்சி படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வரும் போது தங்களது கல்விச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டையின் நகலினை கொண்டு வர வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு தொடர்ந்து பராமரிப்பில் வைக்கப்படும் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT