தேனி

குடிநீர் பிரச்னை: சில்வார்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்ககோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சில்வார்பட்டி, தெற்குதெரு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். மேலும், அப்பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி, ஆழ்குழாய் ஆகியவற்றை சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT