தேனி

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழா: முகூர்த்தக்கால் நடப்பட்டது

DIN

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை முகூர்த்தக் கால் நடப்பட்டது.
 அதிகாலையில் கௌமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த முகூர்த்தக் காலுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு கோயில் எதிரே உள்ள வீதிகள் வழியாக முகூர்த்தக் கால் எடுத்து வரப்பட்டு ஊன்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.  வரும் ஜூலை 4-ஆம் தேதி சாட்டுதல் நிகழ்சியும், 10-ஆம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 18-ஆம் தேதி அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தல் விழாவும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT