தேனி

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு

DIN

கம்பத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார்.
கம்பத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கம்பம், கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த ரவிசேகர் (37), அர்சுனன் (33), கண்ணன் (40), இலேந்திரன் (36) ஆகிய 4 பேரை கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி கம்பம், வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், கஞ்சா விற்பனை தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ரவிசேகர், அர்ச்சுனன் ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT