தேனி

தனியார் பள்ளி ஊழியர் கழுத்தை நெரித்துக் கொலை: மனைவி கைது

DIN

போடியில் வெள்ளிக்கிழமை, தனியார் பள்ளி ஊழியரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவரது மனைவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 போடி குலாலர்பாளையம் விவேகானந்தர் தெருவில் வசித்து வந்தவர் ராமர் மகன் காளிராஜ் (52). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அன்னக்கொடி (40) என்ற மனைவியும், அக்ஷய் (14) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை காளிராஜ் வீட்டில் நீண்ட நேரமாகியும் படுக்கையிலிருந்து எழாததால் சந்தேகமடைந்த அவரது மகன் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, அவர் உடலில் காயங்களுடனும், கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடயங்களுடனும் சடலமாக கிடந்தாராம்.
 இதுகுறித்து காளிராஜின் உறவினர் ரங்கராஜ் (52) போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இதன் பொறுப்பு காவல் ஆய்வாளரும், போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளருமான வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 அப்போது அன்னக்கொடியை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது, அவர் தான் காளிராஜை கழுத்தை நெரித்தும், கீழே தள்ளி விட்டு காயப்படுத்தியும் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், இந்த கொலைக்கான காரணம் குறித்தும், வேறு யாரும் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT