தேனி

மதுரை- தேனி நெடுஞ்சாலை புதிய சுங்கச் சாவடிகளில் வரி வசூல் இல்லை

DIN

மதுரை-தேனி நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்யப்பட மாட்டாது என்று மதுரை தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வைரப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டு தொகைக்கும் குறைவாக உள்ள சுங்கச் சாவடிகளை விலக்கிக் கொள்ள மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்டம் செக்கானூரணி, தேனி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் ரூ.100 மதிப்பீட்டுக்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகள் செயல்படாது. இந்த சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கவரி ஏதுவும் வசூல் செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT