முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் குப்பைக் கிடங்குகளால் டெங்கு காய்ச்சல் அபாயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடியிருப்பு மத்தியில்  சேமித்து வைக்கப்படும் குப்பை கிடங்கு மூலமாக கொசுக்கள் உற்பத்தியாகி

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடியிருப்பு மத்தியில்  சேமித்து வைக்கப்படும் குப்பை கிடங்கு மூலமாக கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல் பரவி வருவதை தடுக்க வேண்டும் என  பொதுமக்கள்   கோரிக்கை விடுத்தனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 5- ஆவது வார்டு பகுதியில் உள்ள தென்னகர் காலனி மற்றும் பி.டி.ஆர். காலனியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் நீண்ட நாள்கள் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.  பொதுமக்களிடம் குப்பைகளை சேகரிக்கும் பேரூராட்சி பணியாளர்கள் குடியிருப்புக்கு சற்று தொலைவில் காலியிடத்தில் கொட்டி  தீ வைப்பதால்  சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.  மேலும் தென்னகர் காலனியில் வீடுகளில் மாடு வளர்க்கும் சிலர் வீட்டிற்குள்ளே  அதன் கழிவுகளை தேக்கி வைக்கின்றனர்.  இதுபோல சிலர் குடியிருப்புகள் மத்தியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்  வந்து செல்லும் இடங்களில் கிடங்கு அமைத்து குப்பைகளை சேமிக்கின்றனர். இந்த குப்பை கிடங்குகளில் பல நாள்களாக தேங்கி கிடக்கும் கும்பைகளை அகற்றாத நிலையில் மழைக்காலம் என்பதால்  துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
தற்போது   கொசுக்கள் அதிகமானதால்  அப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் 20 க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.     பல மாதங்களாக ஒரே இடத்தில் தேங்கி கிடக்கும் குப்பை கிடங்கை அகற்ற அப்பகுதி  பொதுமக்கள்  சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் புகார்  தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்  பொதுமக்கள் தெரிவித்தனர்.
    எனவே உத்தமபாளையம் பேரூராட்சியிலுள்ள  5 ஆவது  வார்டில் பொதுமக்கள் வசிக்கும் இடம் மற்றும் வீடுகளில் சேமிக்கும் குப்பை கிடங்கை அகற்றி   டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →