தேனி

108 ஆம்புலன்ஸ் சேவையை முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை முறைப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து எழுச்சி முன்னணி சார்பில்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களில் தேவையான முதலுதவி உபகரணங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகரத் தலைவர் வெங்கலபாண்டி, ஒன்றியத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கோரிக்கை குறித்து ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்து முன்னணியினர் உடலில் கட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT