தேனி

தேனி அருகே கந்து வட்டி: ஒருவர் கைது

DIN

உப்பார்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்தையா (55). இவர், அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேந்திரன் (52) என்பரிடம் 6 ஆண்டுகளுக்கு முன் வட்டிக்கு ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். 
இந்த தொகைக்கு அசல் மற்றும் வட்டியாக ரூ. 80 ஆயிரம் வரை திரும்பச் செலுத்தியுள்ள நிலையில், ராஜேந்திரன் தன்னை மிரட்டி தனது தோட்டத்தை  ஒத்திக்கு எழுதி வாங்கி  வைத்துக்கொண்டு, தற்போது பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரனிடம் முத்தையா புகார் அளித்தார்.
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் மீது கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT