தேனி

தேனி மாவட்டத்தில் 11.45 மி.மீ., மழை பதிவு

DIN

தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு சராசரி 11.45 மி.மீ., மழை பெய்துள்ளது.
போடியில் அதிக அளவில் 99.20 மி.மீ., மழை பெய்துள்ளது. பெரியகுளத்தில் 13 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., வைகை அணை நீர்பிடிப்பில் 9.40 மி.மீ., மழை பெய்துள்ளது. தேக்கடியில் 9.20 மி.மீ., முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 3.60 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை 34.38 அடியாக இருந்தது. அணையில் தண்ணீர் இருப்பு 573 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 434 கன அடி. அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 48 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 113.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT