தேனி

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை

DIN

கரும்பு நிலுவைத் தொகை முழுவதும் வழங்கக் கோரி  வைகை அணை அருகேயுள்ள தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் எனக் கூறி மனு அளிக்க வந்தனர். அங்கு ஆலை நிர்வாகத்தினர் இல்லாததால் மனு அளிக்க முடியாமல் அவர்கள் தவித்தனர். அதன்பின் மனுவை பெற்றுக் கொள்ளும் வரை ஆலை முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பொன்ராஜ், மாவட்டச் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறியதாவது: அரசு அறிவித்த படி நிலுவைத் தொகையை வழங்க தயாராக உள்ளோம். அரசு ஆணை வந்தவுடன் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும். தற்போது மேலாளர் வெளியூரில் இருப்பதால் மனுவை பெற முடியவில்லை. பொங்கலுக்குப் பின் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT