தேனி

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது  வழக்கு

DIN

ஆண்டிபட்டி தாலுகாவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ஞாயிற்றுக்கிழமை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், கடமலைக்குண்டு அருகே மூலக்கடை மற்றும் மந்திச்சுனை பகுதியில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக சதீஷ்குமார் (35), சிங்கம் (45), சென்றாயன் (38), முத்துக்காளை (60) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஆண்டிபட்டி போலீஸார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தியதில், பிச்சம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் (36), குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள் (58) ஆகியோரது கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT