தேனி அருகே கஞ்சா விற்ற பெண் கைது
தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரா (55). இவர், கோடங்கிப்பட்டி-வலையபட்டி சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரைக் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.