தேனி

கேரளத்துக்கு கடத்தப்பட்ட 120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

DIN

போடியிலிருந்து கேரளத்துக்கு அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட120 கிலோ ரேசன் அரிசியை போடி வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
போடி வட்டாட்சியர் கே.ஆர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் மருதுபாண்டி, வருவாய் ஆய்வாளர் எம்.ராமர் உள்ளிட்டோர் போடி முந்தல் சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போடியிலிருந்து மூணாறு நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் சோதனையிட்டனர். இதில் பயணிகள் அமரும் இருக்கைகளுக்கு அடியில் மூன்று பைகளில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து 3 பைகளிலும் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT