தேனி

தேனியில் ரூ.1.50 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்

DIN

தேனியில் தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வெள்ளிக்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
   தேனி அருகே அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராஜன். தேனி, கடற்கரை நாடார் தெருவில் உள்ள ராஜனுக்குச் சொந்தமான கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுகுணா தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
    அப்போது, கிட்டங்கியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் மற்றும் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT