தேனி

தடுப்பணையில் மூழ்கி இளைஞர் சாவு

DIN

ஆண்டிபட்டி வைகை அணை அருகே தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர், தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
      தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் முத்துபாண்டி (18). இவர் 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வெள்ளிக்கிழமை தனது  நண்பர்களுடன் சேர்ந்து வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். 
     வெள்ளிக்கிழமை காலை முதல் ராமநாதபுரம் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஆழமான பகுதிக்குச் சென்ற முத்துபாண்டி, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து உடனே வைகை அணை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் 1 மணி நேர தேடலுக்குப் பின் முத்துபாண்டிசடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், போலீஸார் அவரது சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைகை அணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT