தேனி

போடியில் 2 நாள்களாக சாரல் மழை இடி தாக்கி வேப்ப மரம் முறிந்தது

DIN


போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இடி தாக்கியதில் வேப்ப மரம் முறிந்து விழுந்தது.
போடியில் வெள்ளிக்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் போடி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் இடி தாக்கியது இதில் அங்கிருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்தது. அப்போது இடி தாக்கிய சத்தம் சுமார் 1 கிமீக்கும் அப்பால் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மரத்தின் அருகே கால்நடைகள் கட்டப்பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக அவை உயிர் தப்பின. இதையடுத்து முறிந்து விழுந்த பழமையான வேப்ப மரத்தை கிராம மக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். இதைத் தொடர்ந்து போடி பகுதியில் சனிக்கிழமையும் லேசான சாரல் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT